புத்த பிக்குகளின்
புத்தி பிதுங்கல்களினால்
புட்டெறியப்பட்ட பிரஜாவுரிமைகள் தான் இவை.
போதி மரத்தடியில்
பொத்தென்றெழுந்த
பொதுபலசேனாவின்
சதி தான் இவை
உண்ணும் உணவுக்கும்
தடை
உடுக்கும் உடுப்புக்கும்
தடை
உயிர் தந்த ஊரில்
விதிக்கப்பட்ட விதி தான் இவை.
சொத்துக்கள் சூரையாடப்பட்டன
சொந்த மதத் தலங்கள்
அவமதிக்கப்பட்டன.
சோனகர் தலையில்
வாரி இறைக்கப்பட்ட சகதி தான் இவை.
தொழுவதற்கு மசூதிகள்
தேவையில்லை
தெருவோரம் ஆலயங்களும்
தேவாலயங்களும் இல்லை
தேரரின் விகாரை
போதுமாம் இலங்கை மக்களுக்கு.
பொறுப்பற்ற அரசியல்
சாணக்கியர்களும்
பொது பல சேனாவின்
பிக்குகளும்
பொருந்தி நடத்தும்
நாடகங்கள் இவை.
வெலிவெரியவுக்கு
இராணுவம் அனுப்பவும்
வெறித்தனமாக விமர்சிக்கவும்
வேசக்காரன் ஞானசாரருக்கு
இலங்கை தந்த உரிமைகள் இவை
வில்லங்கம் கண்டு
சீலான்
விலாங்காக நழுவினான்
வித்தன் போதி மரத்தான்
உரிமை சாடுகிறான்.
கோட்டாபைய அனுசரனையில்
கொடிய பொதுபலசேன
கொன்று குவிக்கும்
இனப்படுகொலைகளே இவை.
மீதம் உள்ள உயிருக்கும்
உணர்வுக்கும்
மனித உரிமை நிருவனங்களிடம்
கோரும்
மனித ஒப்பாரிக்
கோரல் இது
மூன்று தசாப்தங்களாக
கோரிய உரிமைகளை
முழுமையாகத் தொலைத்தவர்கள்
நாங்கள்----- இன்று
முஸ்லிம்களின்
உரிமைக்கும் மடிப்பிச்சை கோருகின்றோம்.
மனித உரிமை காக்கும்
மன்றங்களே வல்லரசுகளே....
உம்மிடம்
முற்றும் தொலையும்
முன் உரிமை கோருகின்றோம்.........
உலகம் விழிக்கும்
வரை
உயிரை ஏந்தி
ஊசலாடுகின்ற மனசு
இது
உலகத்தான் போடும்
உரிமைப் பிச்சைக்காக
... இன்று
உதிரம் சிந்திக்
காத்திருக்கின்றது.......
ஓவியம் மட்டுமல்ல, கவிதையும் கருத்துடன் இருக்கிறது.
ReplyDeleteசிறப்பு