Sunday, 18 May 2014
இது இலங்கையின் ஊடக ஒடுக்கு முறைக்கு இன்னும் ஓர் அத்தாட்ச்சி......... எம்மைப் போன்ற பத்திரிகையாளர்களின் அவலங்களையும் அவமானங்களையும் உறுதிப் படுத்த இன்னுமொரு அடி இலங்கையால் முன்னெடுக்கப் பட்டுள்ளது......
Sri Lanka Blocks Websites And The President Lies On Twitter (with images, tweets) · CMBtelegraph123
Sri Lanka Blocks Websites And The President Lies On Twitter (with images, tweets) · CMBtelegraph123
Fate of Tamil propagandist and TV presenter -- chilling new evidence....... Isaipriya
ஊழ்வினையின் உந்துதலிள்
இவள் இடுகுழி
நித்தமும் திறக்கப் படும்
அவலம் இது.........
Sunday, 11 May 2014
நான் வரைந்த ஓவியம்........ My paintings............
புத்த பிக்குகளின்
புத்தி பிதுங்கல்களினால்
புட்டெறியப்பட்ட பிரஜாவுரிமைகள் தான் இவை.
போதி மரத்தடியில்
பொத்தென்றெழுந்த
பொதுபலசேனாவின்
சதி தான் இவை
உண்ணும் உணவுக்கும்
தடை
உடுக்கும் உடுப்புக்கும்
தடை
உயிர் தந்த ஊரில்
விதிக்கப்பட்ட விதி தான் இவை.
சொத்துக்கள் சூரையாடப்பட்டன
சொந்த மதத் தலங்கள்
அவமதிக்கப்பட்டன.
சோனகர் தலையில்
வாரி இறைக்கப்பட்ட சகதி தான் இவை.
தொழுவதற்கு மசூதிகள்
தேவையில்லை
தெருவோரம் ஆலயங்களும்
தேவாலயங்களும் இல்லை
தேரரின் விகாரை
போதுமாம் இலங்கை மக்களுக்கு.
பொறுப்பற்ற அரசியல்
சாணக்கியர்களும்
பொது பல சேனாவின்
பிக்குகளும்
பொருந்தி நடத்தும்
நாடகங்கள் இவை.
வெலிவெரியவுக்கு
இராணுவம் அனுப்பவும்
வெறித்தனமாக விமர்சிக்கவும்
வேசக்காரன் ஞானசாரருக்கு
இலங்கை தந்த உரிமைகள் இவை
வில்லங்கம் கண்டு
சீலான்
விலாங்காக நழுவினான்
வித்தன் போதி மரத்தான்
உரிமை சாடுகிறான்.
கோட்டாபைய அனுசரனையில்
கொடிய பொதுபலசேன
கொன்று குவிக்கும்
இனப்படுகொலைகளே இவை.
மீதம் உள்ள உயிருக்கும்
உணர்வுக்கும்
மனித உரிமை நிருவனங்களிடம்
கோரும்
மனித ஒப்பாரிக்
கோரல் இது
மூன்று தசாப்தங்களாக
கோரிய உரிமைகளை
முழுமையாகத் தொலைத்தவர்கள்
நாங்கள்----- இன்று
முஸ்லிம்களின்
உரிமைக்கும் மடிப்பிச்சை கோருகின்றோம்.
மனித உரிமை காக்கும்
மன்றங்களே வல்லரசுகளே....
உம்மிடம்
முற்றும் தொலையும்
முன் உரிமை கோருகின்றோம்.........
உலகம் விழிக்கும்
வரை
உயிரை ஏந்தி
ஊசலாடுகின்ற மனசு
இது
உலகத்தான் போடும்
உரிமைப் பிச்சைக்காக
... இன்று
உதிரம் சிந்திக்
காத்திருக்கின்றது.......
நான் வரைந்த ஓவியம்
இது என்ன.....
இழந்து கொண்டிருக்கும் உணர்ச்சிகளின்
அத்தாட்சியா......
அல்லது தொலைந்து கொண்டிருக்கும்
வார்த்தைகளுக்கு
அத்தாட்சியா......
நான் தொலைத்த உறவுகளை
கூறுமா
அல்லது..... என்னை
உதறிய நட்புகளை தான் கூறுமா.
என்னிடம் பிடுங்கிய
குடியுறிமையை சொல்லவா
இன்னும் எனக்கு
கொடுபடாத அகதியுரிமையை சொல்லவா
அவலங்கள் போதுமடா...... இன்னும் என்னிடம் சுருட்ட ஒன்றும் இல்லையடா............
Oh... Is this how I am losing my confident in my life? May be, is this how I am losing control on the opinion to exterminate my soul.
This could be to emphasise the loss of my relations. and or to emphasis how my friends threw me out from their heats due to the threat of the regime....
Is this how they grabbed my citizenship of my motherland? Or may be is this how UK home office ignored me in granting me the refugee status?.
I am tired of being distressed, weeping, anxiety, diseased and pathos....... I have nothing to swindle anymore......
நான் வரைந்த ஓவியம்..... This is my second painting
My
second painting.
The
ink flew from the pen of mine showed the love I owe to the world.
The
fond I had on my mother Land.
Though,
I had to lose a lot in return.
That
could not be expressed by words.
Still
my soul is swinging with my body as a souvenir.
என் பெனா மைத்துளிகள் சிந்தியதில்
வெளிப்பட்டது அன்பு மட்டும் தான்.
என் நாட்டின் மீது கொண்ட பற்றும் தான்
இருந்தும் நான் தொளைத்தது அதிகம்.
மிஞ்சியது உயிர் மட்டும் தான்.
அதுவும் ஊசலாடுகிறது.
நான் வரைந்த ஓவியம். My first painting.
என்னில் உயிர்த்தெழுந்த
உணர்ச்சிகளுக்கு
பொருள் கொடுத்த
கலை இது.
அன்று நான் மொழிகளை
தொலைத்த பாமரனாக
உருகுலைக்கப்பட்ட
ஊமை.
என் புண்களின்
வழியாக வடிந்த முதல்
இரத்த துளி இது.
The art, which gave the soul to the feelings of mine.
On that day I was the illiterate, disfigured dumb
This picture was the first blood drops of the wounds of
mine.
Subscribe to:
Posts
(
Atom
)