Saturday, 16 August 2014

ராஜதுரோகம்



கோத்தபாயின் தந்திரத்தில்

கோட்டையையே தொலைத்தது

என் இராச்சியம்!

கேட்காத கோட்பாடுகளுக்குள்

கொள்கைகளைக் கலைத்த

இராஜாங்கம்!



பாதுகாப்பு என்ற பெயரில்

பரம்பரைக்கே மரண தண்டனை!

பாச ஒருங்கினைப்பு என்ற பெயரில்

பாக்கு நீரின் குமிழிக்குள் பேனாக்களுக்கான விலங்கு!



மத மமதையில் 

மதத்தையே தூக்கிலிட்ட தேரர்கள் 
 
மகவின் துயிலுருவி

மகக் கற்பழிப்பின் தேவர்கள்!


என்னிடம் பெற்ற வாக்குகளின் அதிகாரத்தில்

எனக்கே சுய தாயக நிராகரிப்பு அச்சுறுத்தல்!

எல்லாளனின் முத்தசாப்த சுடலைத்தீயின் ஆக்ரோசம்

எதிர் வரும் நூறு தசாப்தங்களை ஆக்கிரக்கும்.

3 comments :

  1. ஒரு நாள் விடியும் சிறுபாண்மை நம்மவர் முகத்திலும் புன்னகை மலரும் எனும் அவாவுடன் உம்மைப் போல் ஒருவன்.

    ReplyDelete
  2. நன்றி, உங்கள் கருத்துகள் எப்போதும் என் உயிர் நாடி

    ReplyDelete
  3. ///என்னிடம் பெற்ற வாக்குகளின் அதிகாரத்தில்
    எனக்கே சுய தாயக நிராகரிப்பு அச்சுறுத்தல்!///
    உண்மை வரிகள்... நாங்களே மேடையேற்றிவிட்டோம்.. இப்பொழுது அவர்கள் இராஜ நாடகத்தைப் பார்த்துக் கொட்டாவி மட்டும் தான் விட முடிகிறது

    ReplyDelete