Friday, 21 November 2014

A lullaby for you my rose.............

A lullaby I wrote for the child of three and half year old left the world by a car accident few months ago. She is very close to my heart. ( my friends child) I wrote this lullaby in my mother tongue (Tamil) and Translated to English.


Its my feeling for her.










ஆராரோ ஆரிராரோ
ஆரடிச்சி நீயழுதாய்
கலங்காதே நானிருக்கேன்
கண்மணியே கண்ணுறங்கு

கருவுக்குள் காத்தேனே
கண்ணுக்குள் வைத்தேனே
கார்மேக இருளில் ஏனோ
கண்முன்னே தொலைத்தேனே
கற்பகமே கண்ணுறங்கு

உயிர் உன்னத் தேடுது
துயிலின்றி வாடுது
பயிரிழந்த பூமியிது
தரிசாகுது தாயே கண்ணுறங்கு.

உன்னுதிரம் கண்ணுக்குள்
ஊற்றாகுது கண்ணீராய்
உனதுயிருக்காய் கையேந்துறேன்
கனவாகுது தங்கமே கண்ணுறங்கு.

பட்டு பூச்சிய போல
பட்டுத்தேகமுனது
பட்டாம்பூச்சியப்போல
பட்டென்று பறந்ததென்ன
பட்டே கண்ணுறங்கு.

உன்னுரிமையற்றதாயே
என்னுரிமை காப்பாயோ
உயிரொன்றும் துச்சமில்லையென
எனைத்துறந்து போனாயோ
உயிரே கண்ணுறங்கு

பாட்டிஅடிக்கலயே
பார்போற்றும் பூங்குயிலே
பசி போக்க நீயில்லயே
பாரினில் இனி ஊனில்லயே
பட்சணமே கண்ணுறங்கு

போராட வேண்டாமே
போர் சூழ்ந்த லோகினிலே
போரென்ற பேய் கண்டு
பவ்வியமாய் விலகினாயோ
போற்றத்தகையே கண்ணுறங்கு.

இழப்புக்கு என்னகராதியில்
இனைப்புத்தந்த மொழியே
உலகம் இழந்த உயிரிழப்புகளின் வலியே
உனதிழப்பில் தான் நான் அறிந்தேனடி
ஊற்றே கண்ணுறங்கு.

அன்னையாய் நான்
அன்பாய் நீ
அருமையுணர்த்த
ஆவி துறக்கணுமா
அற்புதமே கண்ணுறங்கு.


போராளிகளின் உதிரங்கண்டேன்
போராட்டத்தில் அகோரங்கண்டேன்.
போர்க்களத்தின் அவலங்கண்டேன்
போலியான உலகமும் கண்டேன்
பெண்ணிழப்பில் கண்ணுறங்கு.

பன்படுத்தா மண்ணினிலே
பயிராய் விழைந்தென்ன
புண்பட்ட கண்ணினாலே
புதிதாய் தேடியென்ன எனப்
போனாயோ கண்ணுறங்கு.

பழி சொல்ல ஆளுண்டு
பழி ஏந்த நானுண்டு
சிலுவைகள் சுமக்க விட்டு
சிறுமி ஏன் ஆவிவிட்டாய்
நிலவே கண்ணுறங்கு

வாழ்கையே பாரமாச்சி
வாழுவோரோ தூரமாச்சி
வாழும் ஆவிகொண்டு
வாஞ்சியே போனதெங்கே
வாகையே கண்ணுறங்கு

ஆறுதல் வார்த்தைகளாம்
ஆளோடு பூச்செண்டுகளாம்
ஆரவார பத்திரிகை பிரசுரங்களாம்
ஆருயிரே நீயாகுமா
கண்ணுறங்கு.

சொல்ல வார்த்தையில்ல
சொந்த வாழ்க்கையில்ல
சோகம் இனியும் சொல்ல
சுற்றம் இடம் தரல்ல
செல்வமே கண்ணுறங்கு.

பார் துறக்க முடியல்ல
பரம்பரையும் விடுகுதில்ல
பரிசயம் எனக்கில்ல
பரிதாபம் தாங்கல்ல
பரிபூரணமே கண்ணுறங்கு

ஆராரோ ஆரிரரோ
ஆரடிச்சி நீயழுதாய்
கலங்க விட்டு சென்றாயே
கானமே கண்ணுறங்கு.




My Baby! Who made you to cry?
I am always there to take care of you.
You are my vision, have a peaceful sleep.



I saved you in my womb
I sheltered you within my eye-lids
I didn't know how I lost you in the darkest cloudiest night on a spot.
You the tree of mine which had given everything I asked for.
Have a peaceful sleep.



My soul is looking for you.
I am exhausted and sleepless
I am the land that lost its plant;
The land lying fallow; my dear! Have a peaceful sleep.


Your blood from my eyes oozing out as tears;
My tears are the blood of yours falling as a water fall.
Begging the God to return you to me;
It’s become a dream my golden girl;
Have a peaceful sleep.



Your skin is like silk from the silk worm.
Why did you fly away like a butterfly?
The silk of mine!!!, have a peaceful sleep.



Is that because you thought that your mother doesn't have her freedom and how is she going to save you...
and left you soul coz It’s not worth to live any more.....
You are my soul, sleep peacefully.



No one hurt you ....you are the best in the world...
I am starving but
you are not there to feed me...
You are my food for my heart....
have a peaceful sleep.



It’s a world full of war....
was the war of devil threat you to leave?
Oh my blessed one....
Have peaceful sleep.



You are the language which showed me the meaning of the word ‘lost’.
Felt the pain of world that had lost live through your pain of loss.
You are my strength.....
Have a peaceful sleep.



I am the mother
You are the love
Did you leave me to prove that you’re the precious?
Oh my wonder..... Have a peaceful sleep.



Through your loss I found the blood of the one fights in the war,
the aggressiveness of the war and the evil fate of distress, pathos, anxiety and the weeping of the battle field in front of me
Even I saw the counterfeit of the world from your loss.
You’re my desire, have a peaceful sleep.....



Did you leave me by thinking of not worth to grow in a rusty field or
it’s not worth to see by blind eyes.
Have a peaceful sleep.



My girl... why did you leave me as crucified.
There are enough to blame me and
I am always there to take them,,,, still...
You are my moon. Have a peaceful sleep........



My life is taken away from me...
my life placed a burden on me.
Whoever lives here became very far for my heart.
You are the penance of mine.
Have a peaceful sleep.



Do you know for me nothing worth than you?
There are flowers, lots of visitors, media, sympathy notes,
but where are you? Have a peaceful sleep.



Today... there is no one to listen to my sorrow.
No more life for me and my words ever come out any more...
You are my wealth. Have a peaceful sleep............



It’s pity, that I don’t have an experience and also I am scared, that my ancestry will blame me,
if I leave this world on my own.
You are the fulfilment of mine. Have a peaceful sleep.



Oh my darling, who made you to cry.
Why did you Leave us in tears..
You are a peaceful song, have peaceful sleep

Tuesday, 30 September 2014

Open mind

Norfolk and Suffolk NHS Foundation Trust  joined with Suffolk Refugee Support and Caribbean and African Community health support forum  arranged an event called open mind on last Saturday 27 th of September  2014 at The Key.  

The event was set to identify the impact of  mental health services on the mental health service users.  

Open Mind Workshop 27th September 2014


12.30-13.30
Lunch, Networking and Music
13.30-13.40
Introduction.

Overview of the project and why we are here today?

Importance of engaging with BME communities. 
 (Clem Turner & Ravi Seenan)
13.40-13.55
Paintingstaking you beyond word…

Zamrooth takes us through her experience of Mental health in UK and how she coped with her illness.
13.55-14.1
Being locked in…

Noel’s tell his experience of using Mental health services in Suffolk.
14.10-15.10
Workshop 1 & 2- combined

BME perspectives of recognising signs and symptoms of mental health and coping strategies.

15.10-15.20
Coffee
15.20-15.35
Everyst experience of mental health.

15.35-16.35
Workshop 3 & 4- combined

What are the barriers to accessing services and the experiences of using services for people from BME communities?

16.35-17.10
Missed opportunity

Telling the story of a young black man called Chis and his experience of mental ill health.

17.10-17.30
Feedback, Evaluation and Closure


I was involved in the event to  add some fragrance to make the mental health services better.

Paintings taking you beyond words...  The presentation made by me.




















Saturday, 16 August 2014

ராஜதுரோகம்



கோத்தபாயின் தந்திரத்தில்

கோட்டையையே தொலைத்தது

என் இராச்சியம்!

கேட்காத கோட்பாடுகளுக்குள்

கொள்கைகளைக் கலைத்த

இராஜாங்கம்!



பாதுகாப்பு என்ற பெயரில்

பரம்பரைக்கே மரண தண்டனை!

பாச ஒருங்கினைப்பு என்ற பெயரில்

பாக்கு நீரின் குமிழிக்குள் பேனாக்களுக்கான விலங்கு!



மத மமதையில் 

மதத்தையே தூக்கிலிட்ட தேரர்கள் 
 
மகவின் துயிலுருவி

மகக் கற்பழிப்பின் தேவர்கள்!


என்னிடம் பெற்ற வாக்குகளின் அதிகாரத்தில்

எனக்கே சுய தாயக நிராகரிப்பு அச்சுறுத்தல்!

எல்லாளனின் முத்தசாப்த சுடலைத்தீயின் ஆக்ரோசம்

எதிர் வரும் நூறு தசாப்தங்களை ஆக்கிரக்கும்.

Sunday, 15 June 2014

அளுத்கமை பெரும்கொலை


இன்று 15.06.2014 ஞாயிற்றுக்கிழமை பௌத்த அடிப்படைவாத அமைப்பான பொதுபல சேன, சிகல ராவிய ஆகிய அமைப்பு களுத்துறை மாவட்டம் அளுத்கம பகுதியிலுள்ள பள்ளிவாசலை கற்களால் தாக்கியதை முன்னிட்டு முஸ்லிம் இளைஞர்களுக்கும் இவ்வினவாத அடிப்படை பேரினவாதிகளுக்குமிடையிலான கைகலப்பை முன்னிட்டு இன்று மாலை அளுத்கம பிரதேசத்தில் ஊரடங்கச் சட்டம் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.




  இக்கைகலப்பு கலவரமாகியதால் அப்பிரதேசத்தின் முஸ்லிம் மக்களின் பெருமளவு உயிர், பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது.  இற்றை வரை கிடைத்த தகவல் படி முஸ்லிம்களின் வீடுகளும் அவர்களின் வியாபாரத்தலங்களும் குறி வைத்துத் தாக்கப்பட்டதாகவும் எரிக்கப்பட்டுள்ளதாகவும். எண்ணற்ற இஸ்லாமிய இளைஞர்களும் பெண்களும் ஓர் நாற்பத்திரண்டு நாளான கைகுழந்தையும் இவ்வார்ப்பாட்டத்தால் நேரடியாக தாக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது , 





அத்துடன் அப்பகுதியின் பௌத்த மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டமைக்கான அற்குறிகள் இல்லை. அதே வேளை இவ்வினவாத அமைப்பு ஊரடங்கச் சட்டம் அமல் படுத்தப்பட்டமைக்குப் பின்னும் பல்வேறு தாக்குதல்களை நடத்தியமையும் அதனை எதிர்த்த முஸ்லிம் மக்கள் மீது பொலீசாரும் இராணுவமும் புகைக்குண்டுகளை வீசித்தடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.



இத்தாக்குதல் இலங்கை நேரம் மாலை 5 மணி முதல் மறுநாள் காலை 2 மணி வரை நடந்து கொண்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் இச்சந்தர்ப்பத்தில் மின்சார, தொலைத்தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இச்சந்தர்ப்பத்தில் இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் இவ்வாறான தாக்குதல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.



 “பள்ளிவாசல்களுக்கு தொழுகைக்குச் சென்றவர்கள் அங்கேயே பொலிஸ் இராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் வீடுகளில் உள்ளவர்களை வெளியேறவிடாமல் தடுப்பதிலுமே பொலிசார் பெரிதும் கவனம் செலுத்துவதாகவும் தர்கா நகரைச்சேர்ந்த முஹம்மத் ரிபாஸ் முஸ்லிம் குரலுக்கு தெரிவித்தார்.






மேலும் இவர் கூறுகையில் எங்கள் ஊரில் நாங்கள் உயிரோடு இருந்தும் எங்களோட குழந்தைகள், பெண்கள், உறவுகள், உயிர்கள், சொத்துக்கள் எதையும் பாதுகாக்க முடியவில்லை  என்றார்.
 மேலும் “உங்கள் பாதுகாப்பிற்கு நீங்களே பொறுப்பென” பொலீசாரால் அறிவிக்கப்பட்டமையும் வருந்தத்தக்க விடயமாகும்.
இச்சந்தர்ப்பத்தில் 119 பொலிஸ் அவசர தொலைபேசி எண் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதும் மற்றும் சகல பாதுகாப்புத்தொடர்பு வழிகளும் மூடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





 இலங்கையின் இஸ்லாமியர்கள் திரண்டு வாழும் கிராமங்களாகிய அளுத்கம, பேருவல, அம்பெபிட்டிய, தர்கா நகர் மற்றும் அதனை ஒட்டிய பல்வேறு கிராமங்களை சேர்ந்த அப்பாவி மக்களாகிய இஸ்லமியர்களை இலங்கை பொலிஸ் இரானுவமும் இனவாத காடயர்களும் கூட்டுச்சேர்த்து தாக்கிக் கொண்டிருப்பதும் மட்டும் அன்றி அவர்களது உடைமைகளை தீக்கிரையாக்கி அங்காங்கே இளைஞர்கள் குழந்தைகள் மற்றும் பெண்களை திட்டமிட்டு படுகொலை செய்துகொண்டிருப்பது தெட்டத்தெளிவாக் வெளிப்படுத்தப் படுகின்றது.






இச்சூத்திரதாரர்கள் பல்வேறு வழிகளில் இலங்கை முஸ்லிம் மக்களை இதற்கு முன்பும் தாக்கிய போதும் இலங்கை அரசு அதற்கு பல்வேறு காரணங்களைக் கூறி பூசி முழுகிக் கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 










இம்முறை அரச அனுசரணையுடன் இராணுவப் போலிஸ் பாதுகாப்புடன் இந்த கொடுந் தாக்குதலை நடத்தி அரசு பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் நரித் தனத்தை நிரூபிக்கின்றது.

 இதில் முக்கியமாக மகிந்த சகோதரர்கள் நாட்டில் இல்லாமலே இவ்வகை ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றமை கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது.



Sunday, 18 May 2014

No Ending: Touching Muslim Shops Goes To Mawanella


Muslim hardware shop was burnt down last night in Mawanella
இது இலங்கையின் ஊடக ஒடுக்கு முறைக்கு இன்னும் ஓர் அத்தாட்ச்சி.........   எம்மைப் போன்ற பத்திரிகையாளர்களின் அவலங்களையும்  அவமானங்களையும் உறுதிப் படுத்த இன்னுமொரு அடி இலங்கையால் முன்னெடுக்கப் பட்டுள்ளது......
Sri Lanka Blocks Websites And The President Lies On Twitter (with images, tweets) · CMBtelegraph123