Friday, 21 November 2014

A lullaby for you my rose.............

A lullaby I wrote for the child of three and half year old left the world by a car accident few months ago. She is very close to my heart. ( my friends child) I wrote this lullaby in my mother tongue (Tamil) and Translated to English.


Its my feeling for her.










ஆராரோ ஆரிராரோ
ஆரடிச்சி நீயழுதாய்
கலங்காதே நானிருக்கேன்
கண்மணியே கண்ணுறங்கு

கருவுக்குள் காத்தேனே
கண்ணுக்குள் வைத்தேனே
கார்மேக இருளில் ஏனோ
கண்முன்னே தொலைத்தேனே
கற்பகமே கண்ணுறங்கு

உயிர் உன்னத் தேடுது
துயிலின்றி வாடுது
பயிரிழந்த பூமியிது
தரிசாகுது தாயே கண்ணுறங்கு.

உன்னுதிரம் கண்ணுக்குள்
ஊற்றாகுது கண்ணீராய்
உனதுயிருக்காய் கையேந்துறேன்
கனவாகுது தங்கமே கண்ணுறங்கு.

பட்டு பூச்சிய போல
பட்டுத்தேகமுனது
பட்டாம்பூச்சியப்போல
பட்டென்று பறந்ததென்ன
பட்டே கண்ணுறங்கு.

உன்னுரிமையற்றதாயே
என்னுரிமை காப்பாயோ
உயிரொன்றும் துச்சமில்லையென
எனைத்துறந்து போனாயோ
உயிரே கண்ணுறங்கு

பாட்டிஅடிக்கலயே
பார்போற்றும் பூங்குயிலே
பசி போக்க நீயில்லயே
பாரினில் இனி ஊனில்லயே
பட்சணமே கண்ணுறங்கு

போராட வேண்டாமே
போர் சூழ்ந்த லோகினிலே
போரென்ற பேய் கண்டு
பவ்வியமாய் விலகினாயோ
போற்றத்தகையே கண்ணுறங்கு.

இழப்புக்கு என்னகராதியில்
இனைப்புத்தந்த மொழியே
உலகம் இழந்த உயிரிழப்புகளின் வலியே
உனதிழப்பில் தான் நான் அறிந்தேனடி
ஊற்றே கண்ணுறங்கு.

அன்னையாய் நான்
அன்பாய் நீ
அருமையுணர்த்த
ஆவி துறக்கணுமா
அற்புதமே கண்ணுறங்கு.


போராளிகளின் உதிரங்கண்டேன்
போராட்டத்தில் அகோரங்கண்டேன்.
போர்க்களத்தின் அவலங்கண்டேன்
போலியான உலகமும் கண்டேன்
பெண்ணிழப்பில் கண்ணுறங்கு.

பன்படுத்தா மண்ணினிலே
பயிராய் விழைந்தென்ன
புண்பட்ட கண்ணினாலே
புதிதாய் தேடியென்ன எனப்
போனாயோ கண்ணுறங்கு.

பழி சொல்ல ஆளுண்டு
பழி ஏந்த நானுண்டு
சிலுவைகள் சுமக்க விட்டு
சிறுமி ஏன் ஆவிவிட்டாய்
நிலவே கண்ணுறங்கு

வாழ்கையே பாரமாச்சி
வாழுவோரோ தூரமாச்சி
வாழும் ஆவிகொண்டு
வாஞ்சியே போனதெங்கே
வாகையே கண்ணுறங்கு

ஆறுதல் வார்த்தைகளாம்
ஆளோடு பூச்செண்டுகளாம்
ஆரவார பத்திரிகை பிரசுரங்களாம்
ஆருயிரே நீயாகுமா
கண்ணுறங்கு.

சொல்ல வார்த்தையில்ல
சொந்த வாழ்க்கையில்ல
சோகம் இனியும் சொல்ல
சுற்றம் இடம் தரல்ல
செல்வமே கண்ணுறங்கு.

பார் துறக்க முடியல்ல
பரம்பரையும் விடுகுதில்ல
பரிசயம் எனக்கில்ல
பரிதாபம் தாங்கல்ல
பரிபூரணமே கண்ணுறங்கு

ஆராரோ ஆரிரரோ
ஆரடிச்சி நீயழுதாய்
கலங்க விட்டு சென்றாயே
கானமே கண்ணுறங்கு.




My Baby! Who made you to cry?
I am always there to take care of you.
You are my vision, have a peaceful sleep.



I saved you in my womb
I sheltered you within my eye-lids
I didn't know how I lost you in the darkest cloudiest night on a spot.
You the tree of mine which had given everything I asked for.
Have a peaceful sleep.



My soul is looking for you.
I am exhausted and sleepless
I am the land that lost its plant;
The land lying fallow; my dear! Have a peaceful sleep.


Your blood from my eyes oozing out as tears;
My tears are the blood of yours falling as a water fall.
Begging the God to return you to me;
It’s become a dream my golden girl;
Have a peaceful sleep.



Your skin is like silk from the silk worm.
Why did you fly away like a butterfly?
The silk of mine!!!, have a peaceful sleep.



Is that because you thought that your mother doesn't have her freedom and how is she going to save you...
and left you soul coz It’s not worth to live any more.....
You are my soul, sleep peacefully.



No one hurt you ....you are the best in the world...
I am starving but
you are not there to feed me...
You are my food for my heart....
have a peaceful sleep.



It’s a world full of war....
was the war of devil threat you to leave?
Oh my blessed one....
Have peaceful sleep.



You are the language which showed me the meaning of the word ‘lost’.
Felt the pain of world that had lost live through your pain of loss.
You are my strength.....
Have a peaceful sleep.



I am the mother
You are the love
Did you leave me to prove that you’re the precious?
Oh my wonder..... Have a peaceful sleep.



Through your loss I found the blood of the one fights in the war,
the aggressiveness of the war and the evil fate of distress, pathos, anxiety and the weeping of the battle field in front of me
Even I saw the counterfeit of the world from your loss.
You’re my desire, have a peaceful sleep.....



Did you leave me by thinking of not worth to grow in a rusty field or
it’s not worth to see by blind eyes.
Have a peaceful sleep.



My girl... why did you leave me as crucified.
There are enough to blame me and
I am always there to take them,,,, still...
You are my moon. Have a peaceful sleep........



My life is taken away from me...
my life placed a burden on me.
Whoever lives here became very far for my heart.
You are the penance of mine.
Have a peaceful sleep.



Do you know for me nothing worth than you?
There are flowers, lots of visitors, media, sympathy notes,
but where are you? Have a peaceful sleep.



Today... there is no one to listen to my sorrow.
No more life for me and my words ever come out any more...
You are my wealth. Have a peaceful sleep............



It’s pity, that I don’t have an experience and also I am scared, that my ancestry will blame me,
if I leave this world on my own.
You are the fulfilment of mine. Have a peaceful sleep.



Oh my darling, who made you to cry.
Why did you Leave us in tears..
You are a peaceful song, have peaceful sleep