.jpg)
இன்று 15.06.2014 ஞாயிற்றுக்கிழமை பௌத்த அடிப்படைவாத அமைப்பான பொதுபல சேன, சிகல ராவிய ஆகிய அமைப்பு களுத்துறை மாவட்டம் அளுத்கம பகுதியிலுள்ள பள்ளிவாசலை கற்களால் தாக்கியதை முன்னிட்டு முஸ்லிம் இளைஞர்களுக்கும் இவ்வினவாத அடிப்படை பேரினவாதிகளுக்குமிடையிலான கைகலப்பை முன்னிட்டு இன்று மாலை அளுத்கம பிரதேசத்தில் ஊரடங்கச் சட்டம் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.


அத்துடன் அப்பகுதியின் பௌத்த மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டமைக்கான அற்குறிகள் இல்லை. அதே வேளை இவ்வினவாத அமைப்பு ஊரடங்கச் சட்டம் அமல் படுத்தப்பட்டமைக்குப் பின்னும் பல்வேறு தாக்குதல்களை நடத்தியமையும் அதனை எதிர்த்த முஸ்லிம் மக்கள் மீது பொலீசாரும் இராணுவமும் புகைக்குண்டுகளை வீசித்தடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.
இத்தாக்குதல் இலங்கை நேரம் மாலை 5 மணி முதல் மறுநாள் காலை 2 மணி வரை நடந்து கொண்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் இச்சந்தர்ப்பத்தில் மின்சார, தொலைத்தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இச்சந்தர்ப்பத்தில் இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் இவ்வாறான தாக்குதல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
.jpg)
.jpg)
மேலும் இவர் கூறுகையில் எங்கள் ஊரில் நாங்கள் உயிரோடு இருந்தும் எங்களோட குழந்தைகள், பெண்கள், உறவுகள், உயிர்கள், சொத்துக்கள் எதையும் பாதுகாக்க முடியவில்லை என்றார்.
மேலும் “உங்கள் பாதுகாப்பிற்கு நீங்களே பொறுப்பென” பொலீசாரால் அறிவிக்கப்பட்டமையும் வருந்தத்தக்க விடயமாகும்.
இச்சந்தர்ப்பத்தில் 119 பொலிஸ் அவசர தொலைபேசி எண் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதும் மற்றும் சகல பாதுகாப்புத்தொடர்பு வழிகளும் மூடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
.jpg)
இலங்கையின் இஸ்லாமியர்கள் திரண்டு வாழும் கிராமங்களாகிய அளுத்கம, பேருவல, அம்பெபிட்டிய, தர்கா நகர் மற்றும் அதனை ஒட்டிய பல்வேறு கிராமங்களை சேர்ந்த அப்பாவி மக்களாகிய இஸ்லமியர்களை இலங்கை பொலிஸ் இரானுவமும் இனவாத காடயர்களும் கூட்டுச்சேர்த்து தாக்கிக் கொண்டிருப்பதும் மட்டும் அன்றி அவர்களது உடைமைகளை தீக்கிரையாக்கி அங்காங்கே இளைஞர்கள் குழந்தைகள் மற்றும் பெண்களை திட்டமிட்டு படுகொலை செய்துகொண்டிருப்பது தெட்டத்தெளிவாக் வெளிப்படுத்தப் படுகின்றது.
.jpg)
இச்சூத்திரதாரர்கள் பல்வேறு வழிகளில் இலங்கை முஸ்லிம் மக்களை இதற்கு முன்பும் தாக்கிய போதும் இலங்கை அரசு அதற்கு பல்வேறு காரணங்களைக் கூறி பூசி முழுகிக் கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இம்முறை அரச அனுசரணையுடன் இராணுவப் போலிஸ் பாதுகாப்புடன் இந்த கொடுந் தாக்குதலை நடத்தி அரசு பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் நரித் தனத்தை நிரூபிக்கின்றது.
இதில் முக்கியமாக மகிந்த சகோதரர்கள் நாட்டில் இல்லாமலே இவ்வகை ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றமை கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது.